வியாழன், 6 டிசம்பர், 2012

வாழும் வரை போராடு


“இயற்கையை அவதானியுங்கள், இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; அது உங்களைக் கைவிடாது” - ஃப்ராக் லாயிட் ரைட்

#1. மொட்டும் மலரும் - Red Granadilla 
Common name: Red Passion Flower, Scarlet Passion Flower, Red Granadilla 
Botanical name: Passiflora coccinea Family: Passifloraceae (Passion flower family)


தொகுப்பில் இருக்கும் மலர்களின் பெயர்களை அறிய உதவிய நண்பர்களுக்கு நன்றி! நன்றி!

#2. அரும்புகள்

#3. மெல்ல விரியும் மென்பூக்கள் - Rose-Scented Geranium
Rose-Scented Geranium or Sweet scented geranium 
Botanical name: Pelargonium graveolens Family: Geraniaceae (Geranium family)


#4. பின்னல் - Quilled Daisy Mum 

#5. பின்னலில் ஒரு ஜன்னல்:)!
Common name: Quilled daisy mum, florist's chrysanthemum, Chrysanthemum, Chandramukhi (Manipuri) 
Botanical name: Chrysanthemum morifolium 'Illusion'    Family: Asteraceae (Sunflower family)



#6. சுழன்றாடும்.. Periwinkle - Pink


#7. இரகசியம் பேசுகின்றன மலர்கள்.. உற்றுக் கேட்கிறது சருகு..!
Frangipani (பாதிரிப்பூ)

#8. ஆதவன் கதிர் பட்டு அழகாய் முகம் மலர்ந்து..  Cosmos



#9. வாழும் வரை போராடு


Ixora (இட்லிப்பூ)

நன்கு மலர்ந்தவையாக முன்னர் எடுத்தவை:


***

52 கருத்துகள்:

  1. மிக அருமை.பின்னல் அழகோ அழகு- போர்ட்ரெய்ட்டாக வீட்டு சுவரில் வைத்தால் மிக அழகாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம்போல் அருமை!!!!

    முதல் நாலு படப்பூக்களுக்குப் பெயர் தெரியலை:(

    7 frangipani flower (பாதிரிப்பூன்னு சொல்வாங்க)
    8 Cosmos (கேரளாவில் இதுக்கு மாங்காய்நாரின்னு பெயர். நியூஸியிலேயும் நம்மூட்டுலே மஞ்சள் நிறத்தில் இருக்கு.)

    9 இதுவும் கேரளாவில் செத்திப்பூன்னு (செத்தி மந்தாரம் துளசி பிச்சகப்பூ மாலை சார்த்தி ...பாட்டு நினைவு இருக்கா?) சொல்வாங்க. சண்டிகர் வீட்டுலே வச்சுருந்தேன். வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் கூட இருக்கு.

    சென்னையில் இதுக்கு இட்லிப்பூன்னு பெயரோ?

    பதிலளிநீக்கு
  3. வண்ணப் பூக்களின் படங்கள் அழகு. தலைப்புகளும் அழகு. துளசி மேடம்...இட்லிப்பூ இப்படி இருக்காது என்று நினைக்கிறேன். இன்னும் அடர்த்தியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்! முதல் படத்தில் இருக்கும் பூ பள்ளியிறுதியில் பாட்டனி-யில் பார்த்த மாதிரி தெரிகிறது, பெயர் நினைவில்லை! :)

    3-இந்தப் பூவை இங்கே(யு.எஸ்.) பார்த்திருக்கிறேன், பெயர் தெரியலைங்க.

    4,5 - செவ்வந்திக் குடும்பத்தின் உறுப்பினரா இருக்கக்கூடுமோ? ;)

    7- நாவில்லா அரளி என்று எங்க ஊர்ப்பக்கம் சொல்வோம்.:)

    8- cosmos -இது பல்வேறு நிறங்களிலும் இருக்கிறது. http://en.wikipedia.org/wiki/Cosmos_%28plant%29

    9. இட்லிப்பூ என்று சொல்லுவோம்! :)

    பதிலளிநீக்கு
  5. அழகோ அழகு!
    இட்லிப்பூதான், மலராமல் இருப்பதால் அப்படி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்த அழகான பூக்களின் பெயர்களில் ஒன்னு கூட எனக்கு தெரியல்லியே?

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கேமரா கண்களில் பூக்கள் இன்னும் அழகாய்த் தெரிகின்றன..

    பதிலளிநீக்கு
  8. ஆஹா..என்ன அருமையான கக்களைக்கவ்ரும் பளிச் படங்கள்..கை கொடுங்க ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  9. பார்த்திராத பூக்களை எங்கள் கண்களுக்கு விருந்தாகப் படைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. பின்னி விட்டீர்கள் பின்னி பின்னல் போன்ற படங்களை அளித்து!

    பதிலளிநீக்கு
  11. அத்தனையுமே அருமை சகோ.... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா அத்தனையும் அழகு அக்கா....

    பதிலளிநீக்கு
  13. நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி

    போட்டோக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  14. பூக்கள் அருமை. சிலவற்றைத் தவிர மற்றவைகளை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். எங்கே படம் பிடிக்கப்பட்டது என்ற விபரமும் சொல்லிருக்கலாம். ரொம்ப ஆச்சரியாம இருக்குது பார்க்கிறதுக்கு.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அத்தனையுமே அருமை. கண்களை கொள்ளைக் கொண்டன.

    இட்லிப்பூவை விருட்சிப்பூன்னும் சொல்வாங்க...

    பதிலளிநீக்கு
  16. மிக அருமையான போட்டோக்கள் .
    கண்ணிற்கு விருந்தாக அமைந்தன அவ்வளவும்.
    பூவும் அழகு .
    பூவைப் பற்றிய வர்ணனை
    அதைவிட அழகு .
    ராஜி

    பதிலளிநீக்கு
  17. @துளசி கோபால்,

    தோட்டக்கலையில் ஆர்வத்துடன் ஈடுபடும் உங்களுக்கு அநேகமாய் பலவற்றின் பெயர் தெரிந்தே இருக்கிறது, இணையத்தின் உதவி இல்லாமல்.

    9.. ஆழ் சிகப்பில் இருந்ததாலும் பூத்தும் பூக்காமலும் இப்போதுதான் பார்ப்பதாலும் சந்தேகம். நீங்களும் கவிநயாவும் சொன்னதும் நான் முன்னர் எடுத்தப் படங்களோடு ஒப்பிட்டே உறுதிபடுத்திக் கொண்டேன்:)! ஆம், Ixora ஆங்கிலப் பெயர். அதையும் குறிப்பிட்டுள்ளேன்.

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  18. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம். இதழ்களும் இலைகளும் இட்லி பூதான் என உறுதி செய்கின்றன:)!

    பதிலளிநீக்கு
  19. @Mahi,

    மிக்க நன்றி:)! இப்போது அனைத்து மலர்களின் பெயர்களையும் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். முதல் மலர் பெயர் Red Passion Flower (or) Scarlet Passion Flower (or) Red Granadilla!

    பதிலளிநீக்கு
  20. @கவிநயா,

    நன்றி கவிநயா, இட்லி பூதான் என உறுதி செய்ததற்கும்:)!

    பதிலளிநீக்கு
  21. @NKR R,

    நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  22. @ஹுஸைனம்மா,

    நன்றி ஹுஸைனம்மா. பெங்களூர் மலர்களே. கடந்த சில மலர் பதிவுகள் யாவும் நான் வசிக்கிற குடியிருப்பிலும், எனது தோழியின் குடியிருப்பிலும் எடுத்தவை.

    பதிலளிநீக்கு
  23. @கோவை2தில்லி,

    நன்றி ஆதி, இட்லிப்பூ பற்றிய தகவலுக்கும்.

    பதிலளிநீக்கு
  24. புகைப்படங்கள் அழகு! அதுவும் முதல் படம் மிகவும் அழகு!
    நேற்று தான் 'விடைக்கோழி' படித்தேன்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  25. அத்தனை பூக்களும் அருமை. பதிவின் தலைப்பூவும் அருமை.
    இக்சோரா மஹாலக்ஷ்மிக்கு உகந்ததுன்னு கோவிலில் சொல்வார்கள்.
    கண்ணுக்கு விருந்து உங்கள் பதிவு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin