Wednesday, February 22, 2012

பறத்தலின் மீதான புரிதல் - நவீன விருட்சத்தில்..


உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை

அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு
பார்த்தபடி நிற்கிறான்

எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்று
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்

வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்

பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்

வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை
அடைகின்ற பொழுதில்..

விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

12 பிப்ரவரி நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

படம்: கவிதையுடன் வெளியானது.

28 comments:

ஸ்ரீராம். said...

அறிவின் அடக்கம்...
அருமை.

அமைதிச்சாரல் said...

இறகு விரிக்கும் அந்தத் தருணத்தில் அவன் தன்னை நிரூபிப்பான்..

தமிழ் உதயம் said...

கற்பனை அபாரம்.

Kanchana Radhakrishnan said...

அருமை.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//அறிவின் அடக்கம்...
அருமை.//

நன்றி ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//இறகு விரிக்கும் அந்தத் தருணத்தில் அவன் தன்னை நிரூபிப்பான்..//

மிக்க நன்றி சாந்தி:)!

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//கற்பனை அபாரம்.//

மிக்க நன்றி ரமேஷ்.

ராமலக்ஷ்மி said...

Kanchana Radhakrishnan said...
//அருமை.//

நன்றி மேடம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்//
அருமை..:)

வல்லிசிம்ஹன் said...

கண்முன் தன்னம்பிக்கையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது கவிதை வரிகள். உறுதியும் தன் திறமையில் நம்பிக்கையும், கூடவே அடக்கமும் அவனது சக்திகள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

பாச மலர் / Paasa Malar said...

அருமையான வரிகள் ராமலக்ஷ்மி..

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
//அருமை..:)//

நன்றி முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...

வல்லிசிம்ஹன் said...
//கண்முன் தன்னம்பிக்கையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது கவிதை வரிகள். உறுதியும் தன் திறமையில் நம்பிக்கையும், கூடவே அடக்கமும் அவனது சக்திகள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.//

நன்றி வல்லிம்மா.

ராமலக்ஷ்மி said...

பாச மலர் / Paasa Malar said...
//அருமையான வரிகள் ராமலக்ஷ்மி..//

நன்றி மலர்.

Shakthiprabha said...

ரொம்ப அழகு.

ஹேமா said...

நம்பிக்கையைவிட புரிதலே தேவையாயிருக்கிறது.
அட்டகாசமான பறத்தல் !

Rishvan said...

அருமை.... www.rishvan.com

கவிநயா said...

வாவ்! எங்கேயோ போயிட்டீங்க!

ராமலக்ஷ்மி said...

Shakthiprabha said...
//ரொம்ப அழகு.//

நன்றி ஷக்தி.

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...
//நம்பிக்கையைவிட புரிதலே தேவையாயிருக்கிறது.
அட்டகாசமான பறத்தல் !//

நன்றி ஹேமா.

ராமலக்ஷ்மி said...

Rishvan said...
//அருமை.... //

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

கவிநயா said...
//வாவ்! எங்கேயோ போயிட்டீங்க!//

நன்றி கவிநயா.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையான கற்பனை..... சூப்பர் ராமலஷ்மி. வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
//அருமையான கற்பனை..... சூப்பர் ராமலஷ்மி. வாழ்த்துகள்.//

நன்றி பவளா.

அமைதி அப்பா said...

இரண்டு முறை படித்து மூன்றாவது முறையில் புரிந்துக் கொண்டேன்!

ஆ.ஞானசேகரன் said...

//பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
///


நல்லாயிருக்குங்க

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//இரண்டு முறை படித்து மூன்றாவது முறையில் புரிந்துக் கொண்டேன்!//

மகிழ்ச்சி:)! நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஆ.ஞானசேகரன் said...

//நல்லாயிருக்குங்க//

மிக்க நன்றி ஞானசேகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin